Enable Javscript for better performance
நத்தம் அருகே  லாரி மோதி  பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புதன்கிழமை மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண், லாரி மோதி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    நத்தம் அடுத்துள்ள லிங்கவாடியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பெரியக்கா (45). கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை மதுரைக்கு சென்றுவிட்டு, பின்னர் லிங்கவாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். 
    பரளி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளிலிருந்து பெரியக்கா தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
    அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பெரியக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai