Enable Javscript for better performance
நிலக்கோட்டை இடைத் தேர்தலில் 21 மனுக்கள் ஏற்பு, 20 மனுக்கள் தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    நிலக்கோட்டை இடைத் தேர்தலில் 21 மனுக்கள் ஏற்பு, 20 மனுக்கள் தள்ளுபடி

    By DIN  |   Published on : 28th March 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அளிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. நிலக்கோட்டை பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 41 மனுக்கள் செவ்வாய்க்கிழமை வரை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில் வேட்பு மனு பரிசீலனை, நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானு முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட 20 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 20 வேட்பாளர்களின் மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டன.
    சுயேச்சை வேட்பாளர் மனு இழுபறி: சுயேச்சையாக போட்டியிடுவதற்கு தேன்மொழி என்பவர் தாக்கல் செய்த மனுவில், முன்மொழிந்த 10 பேரின் கையொப்பம் தொடர்பாக, அதிமுக வேட்பாளர் தேன்மொழி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்மொழிந்த 10 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட தேர்தல் அலுவலர்கள், சுயேச்சை வேட்பாளர் தேன்மொழி தாக்கல் செய்த மனு மீதான ஆட்சேபனையை  நிராகரித்துவிட்டு,  அவரது  வேட்பு மனு  ஏற்றுக்  கொண்டதாக  அறிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai