Enable Javscript for better performance
பழனி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக பதாகை வைத்ததால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக பதாகை வைத்ததால் பரபரப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றாத பொதுப்பணித்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
     பழனியை அடுத்த மலையடிவார கிராமமான கோம்பைப்பட்டி விவசாய செழிப்பு மிக்க பகுதியாகும். இந்த கிராமத்தில் மழைக்காலங்களில் சாலைகளை மூழ்கடித்து மழை நீர் செல்வது முதல் காட்டுயானைகளால் விவசாய பொருள்கள் சேதமடைவது வரை அனைத்தும் அவ்வப்போது நடைபெற்று வருவதால் அடிக்கடி இழப்புகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். 
    பழனி தொகுதியின் கடைக்கோடி கிராமமாக இது இருப்பதால் அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  கடந்த சிலமாதங்களுக்கு முன் காலனியில் வசிக்கும் மக்களுக்கான மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் சடலங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறைக்கு மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு வழங்கியும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. 
    இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலை காலனியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக புதன்கிழமை ஊர் எல்லையில் பதாகை வைக்கப்பட்டது. 
    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பதாகையை அகற்றி எடுத்துச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai