முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
திண்டுக்கல்லில் லாரி மீது சரக்கு வாகனம் மோதல்: ஓட்டுநர் பலி
By DIN | Published On : 15th May 2019 06:55 AM | Last Updated : 15th May 2019 06:55 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியில், சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள நரியூத்து பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் நிர்மல் (32). சரக்கு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தென்னை நார் கழிவுகளை ஏற்றிக் கொண்டு நத்தம் நோக்கி சென்றுள்ளார். திண்டுக்கல் - நத்தம் சாலையிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்ல முயன்றபோது, அந்த பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் சரக்கு வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த டேவிட் நிர்மல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.