முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே ரூ.5.40 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 15th May 2019 06:55 AM | Last Updated : 15th May 2019 06:55 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே ரூ.5.40 லட்சம் மதிப்பிலான 540 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவரது வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் நடராஜன் தலைமையிலான அலுவலர்கள் குழு, காவல் துறை துணையுடன் சோதனை மேற்கொண்டது.
அப்போது, மணிகண்டன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 540 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மணிகண்டனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தாடிக்கொம்பு போலீஸார் மணிகண்டனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.5.40 லட்சம் என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.