சுடச்சுட

    

    பழனி மலைக்கோயிலில் புதன்கிழமை சுமார் 6  அடி நீளமுள்ள கழுதைவிரியன் பாம்பு பிடிபட்டது.  
    பழனி மலைக்கோயில் படிப்பாதையில் புதன்கிழமை சுமார் 6 அடி நீளமுள்ள கழுதைவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றது. இதைக் கண்ட பொதுமக்கள் திருக்கோயில் பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் பாம்பை பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.  வனத்துறையினர் அந்த பாம்பை கொடைக்கானல் வனப்பகுதியில் உயிருடன் விட்டனர்.  
    தீயணைப்புத்துறையினர் சமீப காலமாக பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பாம்புகளைப் பிடித்து வருகின்றனர்.  இதற்காக, அவர்கள் கருவி ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.   இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் அண்ணாவிநாதன் கூறியது:  கொக்கி போன்ற வளைந்த கருவியால் பாம்பைப் பிடித்து சாக்குப்பையில் போட்டுக் கட்டி, பின் வனப்பகுதியில் விடுவதே முறையாகும். ஆனால் தீயணைப்புப்படையினர் கிடுக்கி போன்ற கருவியின் மூலம் பிடிக்கின்றனர்.  இக் கருவியை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.  இக்கருவியால் பிடிக்கப்படும் பாம்புகள் இறந்து விட வாய்ப்புள்ளது. எனவே கொக்கி போன்ற வளைந்த கருவியையே பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடமும், தீயணைப்புத் துறையினரிடமும் தெரிவித்துள்ளோம் என்றார். 
    இதுகுறித்து விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் கூறுகையில், தீயணைப்புப் படையினர் முறையான கருவிகளைக் கொண்டு பாம்புகளைப் பிடிக்கிறார்களா என்பதை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.  மேலும், அவற்றை முறையாக கையாள, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai