நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 95 சதவீத இடங்கள் நிரம்பின

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வின் போது 95 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வின் போது 95 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 
நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில், இளநிலை அறிவியல் பாடப் பிரிவுகள்(பிஎஸ்சி கணிதவியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், மனையியல், புவியியல்), அனைத்து இளங்கலை பாடப் பிரிவுகள்(பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல்), பிபிஏ தொழில் நிர்வாகவியல், பி.காம். வணிகவியல் பாடங்கள் என மொத்தம் 714 இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 
முதல் கட்டமாக விளையாட்டு, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முடிந்த பின், பிற மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 13 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற்றது. 
இதன் மூலம் மொத்தமுள்ள 714 இடங்களில், 95 சதவீத இடங்கள் நிரப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. மீதமுள்ள 5 சதவீத இடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு மே 20ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com