Enable Javscript for better performance
சுயபடம்:  பிளஸ்-2 மாணவர்  குட்டை நீரில் மூழ்கி பலி- Dinamani

சுடச்சுட

    

    சுயபடம் (செல்ஃபி) எடுக்க முயன்ற பிளஸ்-2 மாணவர் குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், லந்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் ஜீவானந்தம்(19). நிகழாண்டில், பிளஸ் 2 முடித்த இவர், லந்தக்கோட்டை அருகே உள்ள கன்னிமார்பாளையத்தைச் சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் கரூர் மாவட்டம் மாயனூர் காவல் சரகத்திற்குட்பட்ட வீரியபட்டி அருகே உள்ள பழைய கல்குவாரி குட்டையில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் குளிக்கச் சென்றுள்ளார். 
     அப்போது குட்டையின் கரையில் நின்று நண்பர்களுடன் சுயபடம் (செல்ஃபி) எடுத்தபோது தவறி குட்டையின் ஆழமான பகுதியில் ஜீவானந்தம்  விழுந்தார். உடனை அவரை அங்கு நின்றிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். 
    இருப்பினும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். தகவலறிந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai