முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனி அருகே ஜாமீனில் வந்தவருக்கு கத்திக்குத்து
By DIN | Published On : 18th May 2019 07:01 AM | Last Updated : 18th May 2019 07:01 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம் , பழனியில் ஜாமீனில் வந்த இளைஞரை, இருவர் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்றனர்.
பழனி பத்ரா தெருவைச் சேர்ந்தவர் மாசாணம் மகன் இருளப்பன் (20). இவர், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இருளப்பன், கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இருளப்பன், கடந்த சில நாள்களாக பழனி நகர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ராஜேந்திரா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இருளப்பனை இருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த இருளப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இருளப்பனை தாக்கியவர்கள் குறித்து போலீஸார் தேடி வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இருளப்பனை இருவர் தாக்கியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தோட்டக்காரத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் அகிலேஷ் (22), ராமர் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சின்னத்துரை (22) ஆகியோர் பழனி நகர்
காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.