கொடைக்கானலில் இடி மின்னலுடன் மழை
By DIN | Published On : 18th May 2019 06:59 AM | Last Updated : 18th May 2019 06:59 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டியது. இதைத் தொடர்ந்து மாலை சாரல் மழை பெய்தது . அதன் பின்னர் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை, சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சுமார் 30 நிமிடம் மின் விநியோகம் தடைப்பட்டது.
ஆலங்கட்டி மழை: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கடுகுதடி, கே.சி.பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமார் இரண்டு மணி நேரம் பெய்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிப்பட்டனர். பலத்த காற்று, மழை காரணமாக, கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையான செண்பகனூர் அருகே மியூசியம் செல்லும் வழியில் மரம் விழுந்தது.
இதனால் அப் பகுதியில் சுமார் 30நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.