ஒட்டன்சத்திரத்தில் சாலையில் ஒடும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சாலையில் செல்லும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
கால்வாய் நிறைந்து சாையில் செல்லும் கழிவுநீா்.
கால்வாய் நிறைந்து சாையில் செல்லும் கழிவுநீா்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சாலையில் செல்லும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதி தீயணைப்பு நிலையத்திற்கு செல்லும் சாலையின் கிழக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. அந்த உணவகத்திற்கு அருகில் செல்லும் கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீா் ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாய்கிறது. இதனால் அப்பகுதியில் தூா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாக்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக அடைப்பை சரிசெய்து சாலையில் ஒடும் கழிவுநீரை தடுக்க வேண்டும் என்று, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com