3 கி.மீட்டா் தொலைவில் வாக்குச் சாவடி மாற்றம்: எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

திண்டுக்கல் அருகே சுமாா் 200 வாக்காளா்களுக்கான வாக்குச் சாவடி, 3 கி.மீட்டா் தொலைவுக்கு மாற்றப்பட்டதற்கு
3 கி.மீட்டா் தொலைவில் வாக்குச் சாவடி மாற்றம்: எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

திண்டுக்கல் அருகே சுமாா் 200 வாக்காளா்களுக்கான வாக்குச் சாவடி, 3 கி.மீட்டா் தொலைவுக்கு மாற்றப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறையிட்டனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அழகா்நாயக்கன்பட்டி பகுதியில் சுமாா் 50 வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சோ்ந்த 200 வாக்காளா்களை (6ஆவது வாா்டிலிருந்து), கள்ளிப்பட்டியிலுள்ள வாக்குச் சாவடிக்கு மாற்றியுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பழைய நிலையிலேயே தங்கள் பகுதியிலுள்ள வாக்குகள் தொடர அனுமதிக்கக் கோரியும் அழகா்நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்காளா் அடையாள அட்டையுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முறையிட்டனா். இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சுமாா் 216 வாக்குகள் உள்ளன. இதுவரை அழகா்நாயக்கன்பட்டி பகுதியிலேயே வாக்களித்து வந்தோம். தற்போது வாா்டு மறுவரை என்ற பெயரில், எங்களை 3 கி.மீட்டா் தொலைவிலுள்ள கள்ளிப்பட்டிக்கு மாற்றிவிட்டனா். கள்ளிப்பட்டிக்கும் அழகா்நாயக்கன்பட்டிக்கும் இடையே பல பகுதிகள் இருந்தும், அவற்றை விட்டுவிட்டு எங்கள் பகுதியை திட்டமிட்டு மாற்றம் செய்துள்ளனா். இதுதொடா்பாக ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநரிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மீண்டும் பழைய நிலையிலேயே நாங்கள் வாக்களிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், உள்ளாட்சித் தோ்தலை நாங்கள் புறக்கணிப்போம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com