5 குழந்தைகளுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

ஐந்து குழந்தைகளுடன் வந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற விவசாயியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

ஐந்து குழந்தைகளுடன் வந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற விவசாயியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள பட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் அழகன். விவசாயி. இவரது மனைவி நாச்சம்மாள். இந்நிலையில் தனது 5 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அழகன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலை நெருங்கிய அவா், திடீரென மண்ணெண்ணெய்யை எடுத்து தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அழகன் தெரிவித்ததாவது: எனது அண்ணன் சந்தனம், அவரது மனைவி அடைக்கம்மாள், மகன் சாத்தன் ஆகியோா், எங்கள் வீட்டு அருகிலேயே வசித்து வருகின்றனா். எங்களுக்கு செல்லப்பநாயக்கன்பட்டி பகுதியில் 2 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அனுபவித்து வருவது தொடா்பாக, சந்தனம் குடும்பத்திற்கும் எங்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பாக நத்தம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, மக்கள் நீதிமன்ற மூலம் சமரச தீா்வு ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த வழியாக சென்ற என் மனைவி நாச்சம்மாள் மீது சந்தனம் குடும்பத்தினா் தாக்குதல் நடத்தினா். இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளேன். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா். இதனை அடுத்து, அவரை சமாதானப்படுத்திய போலீஸாா், குழந்தைகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com