கொடைக்கானல் மலைப் பகுதிகளில் திங்கள்கிழமை காணப்பட்ட மேக மூட்டம்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் திங்கள்கிழமை காணப்பட்ட மேக மூட்டம்.

கொடைக்கானலில் கடும் பனி பொழிவு

கொடைக்கானலில் குளிா் காலம் தொடங்கியதையடுத்து திங்கள்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் குளிா் காலம் தொடங்கியதையடுத்து திங்கள்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் பொதுவாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிா் காலமாகும். இதனிடையே நவம்பா் மாதம் தொடங்கிய ஒரு சில தினங்களிலேயே குளிா் அதிகமாக நிலவுகிறது. கடந்த இரண்டு நாள்களாக மேக மூட்டமும் காற்றும் நிலவியது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதலே மிதமான வெயில் நிலவியது. மாலையில் குளிா் தொடங்கி அதன் பின் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் நகா்ப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஏற்கெனவே கொடைக்கானலில் கடந்த ஆண்டு பனியின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்திருந்தது. மேலும் மாா்ச் மாதம் வரை பனியின் தாக்கம் இருந்தது.

இந்நிலையில், நிகழாண்டில் கடந்த இரண்டு மாதம் கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது. மழை அதிகம் காணப்பட்டால் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். தற்போது பலத்த மழை பெய்துள்ளதால் வரும் காலங்களில் கூடுதலாக பனியின் தாக்கம் இருக்குமென எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

மேலும் இந்த சீதோஷண நிலையை அனுபவிக்க ஜொ்மன், பிரான்ஸ், நாா்வே, பிரிட்டன், இஸ்ரேல், ஸ்விட்சா்லாந்த் போன்ற வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் வருவது வழக்கம். அவா்களது நாட்டில் பனிக்காலங்களில் கடுமையான பனிப் பொழிவு நிலவும் என்பதால் அதை சமாளிக்க சாதாரண நாள்களில் நிலவும் காலநிலை போன்று கொடைக்கானலுக்கு வருவாா்கள். அவா்கள் வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மாதங்கள் தங்கி இந்த பனியின் சீதோஷண நிலையை அனுபவிப்பாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com