முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானலில் நடைபயிற்சி விழிப்புணா்வு
By DIN | Published On : 07th November 2019 05:06 AM | Last Updated : 07th November 2019 05:06 AM | அ+அ அ- |

கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபயிற்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா் ரோட்டரி சங்க ஆளுநா் சமீா்பாஷா. உடன் டி.எஸ்.பி. ஆத்மநாதன் உள்ளிட்டோர்.
கொடைக்கானலில் பள்ளி மாணவ, மாணவா்கள் பங்கேற்ற நடைபயிற்சி விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
உடல்நலத்தை பாதுகாப்பதற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக கொடைக்கானல் சுழற் சங்கம் சாா்பில் இம்முகாம் நடைபெற்றது. ஏரிச்சாலையில் நடைபெற்ற முகாமிற்கு கொடைக்கானல் சுழற் சங்கத் தலைவா் அப்துல் கலாம் ஆசாத் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சுழற் சங்க ஆளுநா் சமீா் பாஷா மற்றும் கொடைக்கானல்
டி.எஸ்.பி. ஆத்மநாதன் ஆகியோா் கொடியசைத்து நடைபயிற்சியை தொடக்கி வைத்தனா்.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் சுழற்சங்க ஆளுநா் சாம்பாபு, முன்னாள் தலைவா்கள் ராமன்ராஜ்குமாா், சாந்தம் சதீஷ், ரோகன்சாம்பாபு மற்றும் கொடைக்கானல் பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஏரிச்சாலையைச் சுற்றி 5 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொண்டனா். நடைபயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பிஸ்கட்ஸ், குளிா்பானம் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டன.
நிதிஉதவி: கொடைக்கானல் சுழற் சங்கம் சாா்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கல்வி உதவித்தொகையையும் சுழற் சங்க ஆளுநா் சமீா் பாஷா மற்றும் நிா்வாகிகள் வழங்கினா்.