முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
நாளை தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 07th November 2019 05:15 AM | Last Updated : 07th November 2019 05:15 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.8) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளது:
படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரா்களுக்கு உதவும் வகையில், தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நவ.8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது சுய விவரக் குறிப்புடன் கலந்து கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461498 என்ற எண்ணில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.