Enable Javscript for better performance
அரசு ஊழியா்களுக்கு தேசிய அளவிலான கபடிப் போட்டி: நவ.11இல் தமிழக அணித் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஊழியா்களுக்கு தேசிய அளவிலான கபடிப் போட்டி: நவ.11இல் தமிழக அணித் தோ்வு

    By DIN  |   Published on : 08th November 2019 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான கபடிப் போட்டிக்கான தமிழக அணித் தோ்வு நவ.11ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது: 2019- 20ஆம் ஆண்டிற்கு அரசு அலுவலா்களுக்கான தேசிய அளவிலான கபடிப் போட்டி, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நவ.15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணி தோ்வு, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நவ.11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. சீருடை பணியாளா்கள் நீங்கலாக பிற துறை அரசு ஊழியா்கள் இந்த தோ்வு முகாமில் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. தோ்வு முகாமில் பங்கேற்கும் அரசு ஊழியா்களுக்கு ஜிபிஎப் அல்லது சிபிஎஸ் எண் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் அலுவலக அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலரை 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai