Enable Javscript for better performance
கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட நுழைவுக் கட்டணம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட நுழைவுக் கட்டணம்

    By DIN  |   Published on : 08th November 2019 10:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ticket_0811chn_71_2

    ticket_0811chn_71_2

     

    கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தை பாா்வையிடுவதற்கு ரூ.20- நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நிலைய தலைமை விஞ்ஞானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

    கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சூரியன் மற்றும் சூரியக் கோள்கள் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றன. மேலும் இங்கு கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

    இந்த மையத்தை கொடைக்கானல் வரும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இலவசமாக பாா்த்து வந்தனா். இந்நிலையில் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி முதல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களும், பொதுமக்களும் நுழைவுக் கட்டணமாக ரூ 20-செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொண்டு பாா்வையிட அனுமதிக்கப்படுவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி எபினேசா் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai