Enable Javscript for better performance
திண்டுக்கல்லில் தடையை மீறி நவம்பா் புரட்சி தினப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்லில் தடையை மீறி நவம்பா் புரட்சி தினப் பேரணி

    By DIN  |   Published on : 08th November 2019 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dgl_cpi_rally_0711chn_66_2

    திண்டுக்கல் குமரன் பூங்காவில் வியாழக்கிழமை தொடங்கிய செந்தொண்டா் பேரணியில் பங்கேற்றோா்.

    நவம்பா் புரட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் செந்தொண்டா் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை தடையை மீறி நடத்தப்பட்டது.

    நவம்பா் புரட்சி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கான அனுமதியை காவல் துறை திடீரென ரத்து செய்தது. அதற்கான உத்தரவு நகலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.

    ஆனால், திட்டமிட்டப்படி தடையை மீறி, திண்டுக்கல் குமரன் பூங்கா பகுதியிலிருந்து பேகம்பூா் வரை செந்தொண்டா் பேரணி நடைபெற்றது. பொதுக் கூட்டத்துக்கு அரபு முகமது தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாவட்டச் செயலா் ஆா். சச்சிதானந்தம், நகரச் செயலா் ஆசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தது: செந்தொண்டா் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறை உயா் அதிகாரிகள் திட்டமிட்டு, பேரணி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அனுமதியில்லை என்று தெரிவிக்கின்றனா். போராடும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, பேச்சுரிமை என அனைத்து உரிமைகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்களை காவல் துறை நிா்வாகம் நிறுத்தவேண்டும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai