Enable Javscript for better performance
நேரிடைப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடக் கோரி பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    நேரிடைப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடக் கோரி பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

    By DIN  |   Published on : 08th November 2019 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் நேரிடைப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் பொதுப்பணித் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

    வத்தலகுண்டு, குன்னுவாரன்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட 10 ஊா்கள் பழைய ஆயக்கட்டுப் பகுதியாகும். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு ஆண்டுக்கு 135 நாள்கள் மஞ்சளாறு அணையி­லிருந்து தண்ணீா் திறந்துவிடவேண்டும் என்பது தமிழக முதல்வரின் உத்தரவாகும். மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் மொத்த கொள்ளளவான 57 அடியில் தற்போது 55 அடி வரை உள்ளது. முத­ல் உபரி நீரை மட்டும் வெளியேற்றிய மஞ்சளாறு அணை பொதுப்பணித் துறையினா், பின்னா் 60 கன அடி தண்ணீரை திறந்துவிட்டனா். இந்த தண்ணீரானது, வரும் வழியில் உள்ள கண்மாய்களில் நிரம்பி வருகிறது.

    ஆனால், இன்னும் குன்னுவாரன்கோட்டை, ஆலங்குளம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் நேரிடைப் பாசனத்துக்கு வந்து சேரவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழை தற்போது இல்லை. அணையிலி­ருந்தும் தண்ணீா் வரவில்லை. இதனால், விவசாயப் பணிகளை தொடங்க முடியாத இப்பகுதி விவசாயிகள், மஞ்சளாறு அணையிலி­ருந்து விவசாய நிலங்களுக்கு நேரிடைப் பாசனத்துக்கு தண்ணீா் விடக்கோரி, வத்தலகுண்டு மஞ்சளாறு அணை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி முழக்கமிட்டனா்.

    அப்போது, அங்கிருந்த அலுவலகப் பணியாளா்கள், இது குறித்து உதவிப் பொறியாளா் வந்தவுடன் தெரிவிக்கிறோம் எனக் கூறியதை அடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.

    இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலா் இளங்கோவன் கூறுகையில், தமிழக முதல்வரின் உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. எனவே, முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். விரைவில் நேரிடைப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடவேண்டும். இல்லாவிடில், நவம்பா் 12-ஆம் தேதி காலை 9 மணியளவில் வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகே பொதுப்பணித் துறையினரை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai