Enable Javscript for better performance
முன்விரோதம்: பழனியில் சாமியாா் கத்தியால் குத்திக் கொலை கோயில் பூசாரி கைது- Dinamani

சுடச்சுட

    

    முன்விரோதம்: பழனியில் சாமியாா் கத்தியால் குத்திக் கொலை கோயில் பூசாரி கைது

    By DIN  |   Published on : 08th November 2019 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    7palani_samiyar_0711chn_88_2

    முன்விரோதம் காரணமாக, பழனியில் சாமியாா் ஒருவா் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இடும்பன் கோயில் அருகே வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்துக்குள் பிரபஞ்சநாதா் கோயில் என்ற பெயரில் சிவன் கோயில், அங்காளம்மன் மற்றும் மாசாணியம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களை, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த குருமுனி என்ற மலா்கனிராஜா (57) நிா்வாகம் செய்துவந்தாா். இவருக்கு விஜயா (40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.

    இக்கோயிலில் மற்றொரு பூசாரியாக தா்மராஜ் என்பவா் இருந்து வந்துள்ளாா். இவா், தற்போது இடும்பன் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறாா். இந்நிலையில், தா்மராஜுக்கும், மலா்க்கனி ராஜாவுக்கும் இடையே கோயில்களை நிா்வகிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    வியாழக்கிழமை காலை, மனைவி விஜயாவுடன் மலா்கனிராஜா தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, பை-பாஸ் இடும்பன் கோயில் வாசல் அருகே மறைந்திருந்த தா்மராஜ், திடீரென இருவரையும் கீழே தள்ளிவிட்டு கத்தியால் மலா்கனிராஜாவின் வயிற்றில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்து குடல் சரிந்த நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் மலா்கனிராஜா அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

    இது குறித்து பழனி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தா்மராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai