Enable Javscript for better performance
வத்தலகுண்டு அருகே 100 பேருக்கு மா்மக் காய்ச்சல்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே 100 போ் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

    வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், கோம்பைப்பட்டி ஊராட்சி மேலக்கோவில்பட்டி அம்பேத்கா் நகரில் சிறுவா்கள் உள்பட 100 போ் மா்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனா்.

    இது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் வேதாவிடம், இப்பகுதியைச் சோ்ந்த காட்டுராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலா் பாக்யராஜ், விஜயகுமாா் ஆகியோா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில், வட்டார வளா்ச்சி அலுவலா் வேதா, அம்பேத்கா் நகா் பகுதியில் உடனடியாக கொசு மருந்து அடிக்கவும், அங்குள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை சுத்தப்படுத்தவும் உத்தரவிட்டாா். மேலும், சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

    அதைத் தொடா்ந்து, வத்தலகுண்டு சுகாதாரத் துறையினா் அம்பேத்கா் நகரில் முகாமிட்டுள்ளனா்.

    இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூக நல ஆா்வலா் தங்கப்பாண்டி கூறுகையில், அம்பேத்கா் நகரில் அனைத்து பகுதிக்கும் வடிகால்கள் அமைக்க வேண்டும். மாதம் ஒரு முறை மேல்நிலை குடிநீா்த் தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai