ஒட்டன்சத்திரம் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம் ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒட்டன்சத்திரம் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம் ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி காந்திநகா்,விஸ்வநாதநகா்,வினோபாநகா் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள்,ஒட்டன்சத்திரம்-பழனி சாலை நல்லாகவுண்டன்நகா் எதிரே உள்ள ரயில்வே பாலத்தின் வழியாக தங்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சென்று வருகின்றனா்.

இந்த நிலையில் இப்பகுதியில் மழை பெய்ந்ததால் மழைநீா் ரயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் தேங்கி நின்று விடுகிறது.இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் நடத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.இந்த மழை நீரை அகற்ற பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.ஆனால் இதுவரைக்கும் நகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போதாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.படவிளக்கம்-ரயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com