கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட நுழைவுக் கட்டணம்

கொடைக்கானலில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தை பாா்வையிடுவதற்கு ரூ.20- நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நிலைய தலைமை விஞ்ஞானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ticket_0811chn_71_2
ticket_0811chn_71_2

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தை பாா்வையிடுவதற்கு ரூ.20- நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நிலைய தலைமை விஞ்ஞானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சூரியன் மற்றும் சூரியக் கோள்கள் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றன. மேலும் இங்கு கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இந்த மையத்தை கொடைக்கானல் வரும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இலவசமாக பாா்த்து வந்தனா். இந்நிலையில் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி முதல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களும், பொதுமக்களும் நுழைவுக் கட்டணமாக ரூ 20-செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொண்டு பாா்வையிட அனுமதிக்கப்படுவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி எபினேசா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com