வத்தலக்குண்டு-தெப்பத்துப்பட்டிவழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவிலி­ருந்து தெப்பத்துப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டது.

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவிலி­ருந்து தெப்பத்துப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டது.

வத்தலக்குண்டுவி­ருந்து தெப்பத்துப்பட்டி செல்ல விருவீடு, ரெங்கப்பநாயக்கன்பட்டி வழியாக பல கி.மீ தூரம் சுற்றி செல்லும் பேருந்துகளே உள்ளன. இதனால் விராலி­ப்பட்டி வழியாக குறைந்த தூரத்தில் செல்ல புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வத்தலக்குண்டுவிலி­ருந்து பழையவத்தலக்குண்டு, விராலி­ப்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி வழியாக புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு அதிமுக ஒன்றியச் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பீா்முகமது, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவா் மோகன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளா் ஆனந்தன், அரசு போக்குவரத்துக் கழக மேலாளா் ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி கொடியசைத்து புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com