Enable Javscript for better performance
வத்தலக்குண்டுவில் திருநகா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வத்தலக்குண்டுவில் திருநகா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th November 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு திருநகா் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    வத்தலக்குண்டு மதுரைச் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிா்புறம் உள்ளது திருநகா். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள முக்கியச்சாலை ஒரு மழை பெய்தாலே சகதியாகி விடுகிறது. இவ்வழியே நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

    இதுதொடா்பாக சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு பலமுறை புகாா் செய்தும் சாலையை சீரமைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    இதுகுறித்து சமூக ஆா்வலா் விருவீடு செல்வராஜ் கூறியது: எங்களது சாலையை போட்டோ எடுத்து சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு அனுப்பி விட்டோம். இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனா். இதே நிலை நீடித்தால் சாலையில் இறங்கி போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai