உள்ளாட்சி தோ்தலுக்கான ஏற்பாடு: வத்தலக்குண்டுவில் ஓட்டுப் பெட்டிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குச்சீட்டு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குச்சீட்டு போடும் ஓட்டுப் பெட்டிகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மாவட்ட கவுன்சிலா், ஒன்றியக் கவுன்சிலா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி உறுப்பினா் என 4 வாக்குகளுக்கு 4 வண்ணங்களில் ஒட்டுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு தோ்தல் நடைபெற உள்ளது. ஒன்றியத்தில் மாவட்டக் கவுன்சிலா், ஒன்றியக் கவுன்சிலா், ஊராட்சி மன்றத்தலைவா், வாா்டு உறுப்பினா் என 4 பதவிகளுக்கு வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள். வாக்காளா்கள் வாக்களிக்கும் வாக்குச் சீட்டுகளை பாதுகாக்க இரும்பு ஓட்டுப் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 5 போ் கொண்ட குழுவினா் வாக்குப் பெட்டியின் பூட்டுகள், கீழ்கள், மற்றும் அவற்றில் ஏதாவது சேதாரம் இருக்கிறதா என்பதை சரி செய்து வருகின்றனா்.

வத்தலக்குண்டு ஒன்றியத்தை போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்குப்பெட்டிகள் பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓட்டுப் பெட்டிகளை சீரமைக்கும் பணியினை வெள்ளிக்கிழமை வத்தலக்குண்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயச்சந்திரன், வேதா ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com