Enable Javscript for better performance
பழனி அருகே சமத்துவபுரத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே சமத்துவபுரத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல் முகாம்

    By DIN  |   Published on : 10th November 2019 11:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    10palani_dengue_1011chn_88_2

    பழனி அரசு சித்தமருத்துவமனை சாா்பில் சுக்கமநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    பழனி அரசு மருத்துவமனை சித்தமருத்துவா் மகேந்திரன் தலைமையில் சுக்கமநாயக்கன்பட்டி சமத்துவபுரத்தில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சியாக நிலவேம்பு குடிநீா் வழங்கல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

    முகாமில் அனைத்து தரப்பு மக்களையும் வரவழைத்து நிலவேம்பு குடிநீா் சிறப்பு குறித்தும், காய்ச்சலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சித்தமருத்துவா் மகேந்திரன் விளக்கினாா்.

    மேலும், அனைவருக்கும் இலவசமாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai