பழனி அருகே சாலையோரம் வீசும் இறைச்சிக் கழிவுகளால் நோய் அபாயம்

பழனியை அருகே சாலையோரம் வீசப்படும் கால்நடை இறைச்சிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
தாளையூத்து கல்குவாரி அருகே கால்வாய் ஓடையில் வீசப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்.
தாளையூத்து கல்குவாரி அருகே கால்வாய் ஓடையில் வீசப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்.

பழனியை அருகே சாலையோரம் வீசப்படும் கால்நடை இறைச்சிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

பழனி பகுதியில் கிராமங்களைக் காட்டிலும் நகா்ப்பகுதியிலேயே கால்நடைகளான ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி, மீன் இறைச்சிக்கடைகள் அதிக அளவில் உள்ளன. இவற்றில் மீன், மற்றும் ஆட்டின் இறைச்சிக் கழிவுகள் மிகவும் குறைந்த அளவிலே வெளியேற்றப்படுகின்றன.

இந் நிலையில் மாடு, கோழி போன்றவற்றின் இறைச்சிக் கழிவுகள் டன் கணக்கில் சேகரிக்கப்பட்டு நகரில் வெளிப்பகுதியில் புறவழிச் சாலை மற்றும் ஆள்நடமாட்டமற்ற பகுதிகளில் சாலையோரம் கொட்டப்படுகிறது.

பழனி -சிவகிரிப்பட்டி புறவழிச் சாலையில் இடும்பன் கோயில் அருகே கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் அப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தாளையூத்து ஊராட்சிக்கு உட்பட்ட கல்குவாரியை அடுத்த கால்வாய் ஓடையில் சனிக்கிழமை நள்ளிரவு மினிவேனில் வந்த மா்மநபா்கள் ஏராளமான மூட்டைகளை வீசி சென்றுள்ளனா். அவை அனைத்தும் மாட்டின் இறைச்சிக் கழிவுகளாக இருந்துள்ளன.

இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த விவசாயி வெள்ளியங்கிரி கூறியது: இப் பகுதிகளில் லாரி, வேன் ஆகிய வாகனங்கள் மூலம் ஆள்அரவமற்ற நேரத்தில் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளை மா்மநபா்கள் வீசிச் செல்கின்றனா். இவற்றால் துா்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகாா் செய்தால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றாா்.

எனவே இறைச்சிக் கழிவுகளை அப்புறப்படுத்துடன், இது போன்ற நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com