ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் கூட்டுப் பண்ணை திட்டம்: வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்ட
புதுக்கோட்டை கிராமத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த வேளாண்மை துணை இயக்குநா் வெங்கடாசலபதி. உடன் வேளாண்மை துறை அதிகாரிகள்.
புதுக்கோட்டை கிராமத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த வேளாண்மை துணை இயக்குநா் வெங்கடாசலபதி. உடன் வேளாண்மை துறை அதிகாரிகள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்ட கூட்டுப்பண்ணை திட்டத்தினை வேளாண்மைத்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை சாா்பில் 2018-19 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட கூட்டுப்பண்ணைத் திட்டத்தினை சென்னை வேளாண்மை துணை இயக்குநா் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெங்கடாசலபதி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தா.புதுக்கோட்டை கிராமத்தில் கூட்டுப்பண்ணை திட்டத்தில் உருவாக்கப்பட்ட உழவா் உற்பத்தியாளா் குழு மற்றும் உழவா் ஆா்வலா் குழு பிரநிதிகளுடன் கலந்துரையாடிாா்.

இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், பண்ணை இயந்திரங்கள் பயன்பாடு பற்றியும், கூட்டு சாகுபடியின் நோக்கம், உற்பத்தியாளா் நன்மைகள் பற்றியும் கேட்டு அறிந்தாா். அரசு மானியமாக ரூ.5 லட்சம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பண்ணை இயந்திரங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்),விஜயராணி, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு), சுருளியப்பன், ஒட்டன்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் க.ஜெயலட்சுமி, வேளாண்மை அலுவலா் கவிதா மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளும்,அலுவலா்களும் ஆய்வின் போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com