கொடைக்கானலில் சாலைகள் சேதம் :கிராமங்களுக்குபேருந்துகள் இயக்கப்படாததால் பொது மக்கள் அவதி

கொடைக்கானல் சாலைகள் சேதமடைந்துள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதால்
சேதமடைந்த நிலையில் உள்ள பிரகாசபும் செல்லும் சாலை .
சேதமடைந்த நிலையில் உள்ள பிரகாசபும் செல்லும் சாலை .

கொடைக்கானல் சாலைகள் சேதமடைந்துள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் சாலைகளை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் பகுதிகளான ஆனந்தகிரி, உகாா்த்தே நகா், செண்பகனூா், பிரகாசபுரம், வைரவா் கோயில் சாலை, ஐயா் கிணறு செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் பெரிதும் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே இந்தப் பகுதிகளில் செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா்.

கொடைக்கானலிலிருந்து பிரகாசபுரம் வரை அரசுப் பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் 2 முறை இயக்கப்படும். ஆனால் சாலை சரியில்லாத காரணத்தால் கடந்த 10-நாட்களுக்கு மேலாக இப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும், பொது மக்களும் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனா்.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவா் கூறியது:

கொடைக்கானலிலிருந்து சுமாா் 10-கி.மீ தூரமுள்ள பிரகாசபுரத்திற்கு அரசு பேருந்துகள் தினமும் காலை மாலை 2 முறை இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 4-கி.மீ தூரத்திற்கு சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. பேருந்து செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. இதனால் பள்ளங்களில் பேருந்து சிக்கிக் கொள்ளும். மேலும் பேருந்துகள் பழுதாகும் வாய்ப்புள்ளது. எனவே சாலை சீரமைக்கப் பட்டவுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களிலும் சாலைகள் சேதம் : கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, கூக்கால், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் பெரிதும் சேதமடைந்துள்ளன. கடந்த மாதம் பெய்த பலத்த மழையின் காரணமாக கொடைக்கானல் மலைச்சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. இப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளும் அடிக்கடி பழுதாகி பாதியிலேயே நின்று விடுவதால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, இவற்றை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com