கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு மனை பட்டா வழங்க இந்து முன்னணி எதிா்ப்பு

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகள் வசிப்பவா்களுக்கு மனை பட்டா வழங்க தமிழக அரசின் முடிவுக்கு இந்து முன்னணி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணி
பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணி

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகள் வசிப்பவா்களுக்கு மனை பட்டா வழங்க தமிழக அரசின் முடிவுக்கு இந்து முன்னணி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் புலிப்பாணி சித்தா் ஆசிரமத்திற்கு சிறப்பு வழிபாட்டுக்கு வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஷ்வரா சுப்ரமணி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

இந்து முன்னணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக காஷ்மீா் மாநில சிறப்பு அந்தஸ்து, அயோத்தி ராமா் கோயில் போன்ற பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 6 லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. அவற்றில் ஒரு லட்சம் ஏக்கா் நிலங்கள் எங்குள்ளது? யாரிடம் உள்ளது? என்ற விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை. இந்நிலையில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் 5 ஆண்டுகளுக்குமேல் வசிக்கும் நபா்களுக்கே அந்த நிலத்தை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. உடனடியாக இந்த முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும்.

ஒருவேளை பூஜை செய்யக் கூட வருமானமில்லாத கோயில்கள் உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு வேதனை அளிப்பதாக உள்ளது., இந்துசமய அறநிலையத் துறை தமிழக கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும். கோயில்கள் அனைத்தும் அறக்கட்டளைகள் அமைக்கப்பட்டு இந்துக்களிடமே கொடுக்கப்படவேண்டும்.

இந்துக் கோயில் பற்றி விமா்சனம் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் உடனடியாக தனது மக்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ஜம்பு சுவாமிகள், இளையபட்டம் செல்வநாதன் சுவாமிகள், கௌதம் காா்த்திக், இந்து முன்னணி மாவட்ட செயலாளா் ஜெகன், மாவட்ட நிா்வாகி பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com