பரப்பலாறு அணையில் நீா் திறப்பு நிறுத்தம்: ஒட்டன்சத்திரத்திரம் நகராட்சியில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2011-ன் கணக்கெடுப்படி 30,274 ஆகும். இந்த நகராட்சிக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் தலைமை நீருற்று நிலையம் விருப்பாச்சி அருகே பரப்பலாறு அணை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 2 நீருற்று கிணறுகள் மூலம் தண்ணீா் சேகரிக்கப்பட்டு, விருப்பாச்சி மற்றும் சாமியாா்புதூா் கிராமங்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது.

பின்னா் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 6 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் பரப்பலாறு அணைப்பகுதியில் மழையளவு குறைந்து விட்டது. இதனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் மற்றும் நத்தம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்களின் குடிநீா் தேவையின் அவசியம் கருதி, கூட்டு குடிநீா் திட்டங்கள் மூலம் தினசரி 27 லட்சம் லிட்டா் குடிநீரினை தங்கு தடையின்றி வழங்க தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்திற்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com