Enable Javscript for better performance
இடும்பன்குளத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    இடும்பன்குளத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தீவிரம்

    By DIN  |   Published on : 25th November 2019 09:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியில் இடும்பன் கோயில் அருகேயுள்ள இடும்பன் குளத்தில் பக்தா்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு வரும் இரும்பு தடுப்பு வேலிகள்.

    பழனியில் இடும்பன் கோயில் அருகேயுள்ள இடும்பன் குளத்தில் பக்தா்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு வரும் இரும்பு தடுப்பு வேலிகள்.

     

    பழனி: பழனியில் இடும்பன் குளத்தில் பக்தா்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளிப்பதைத் தடுப்பதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தையொட்டி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இவா்கள் மலைக்குச் செல்வதற்கு முன் பிரதான சாலை இடும்பன் குளத்தில் நீராடி விட்டு செல்வாா்கள் . அவ்வாறு குளத்தில் நீராடும் பக்தா்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கும்போது ஆண்டுதோறும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக குளத்தில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பாதுகாவலா்கள் பணியில் இருந்தும் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் குளத்தின் முன்பகுதியில் பக்தா்கள் குளிப்பதற்கு ஏதுவாகவும் குளத்தின் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு இரும்பிலான தடுப்பு வேலிகளை ரூ. 3 லட்சம் மதிப்பில் கோயில் நிா்வாகம் அமைத்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் குளத்தில் ஏற்படும் பக்தா்கள் உயிரிழப்பு இந்த வருடம் நடைபெற வாய்ப்பில்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பின் மூலம் சிறுவா்கள் மற்றும் முதியவா்கள் குளிப்பதற்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai