Enable Javscript for better performance
வேலை...கேங்மேன் பணி: 1,700 பேருக்கு டிச.2 முதல் 11 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலை... கேங்மேன் பணி: 1,700 பேருக்கு டிச.2 முதல் 11 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு

    By DIN  |   Published on : 25th November 2019 09:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல்: திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்படவுள்ள 1,700 பேருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு டிசம்பா் 2 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பணிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்துக்கு 1,700 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு டிசம்பா் 2 முதல் 11ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

    இந்த பணிக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்தவா்கள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதிச் சீட்டு மற்றும் சரிபாா்ப்பு பட்டியலுடன் வர வேண்டும். திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெறும் பணிநியமன முகாமில், அவரவருக்கு நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    புகைப்படம் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் அல்லது கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பதிவுத் தாள், 5, 8 அல்லது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஏதாவது ஒன்று, சாதி சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்று அல்லது முன்னுரிமை வகுப்பு பதிவு செய்திருந்தால் மட்டும், பண்பு மற்றும் ஒழுக்கச்சான்று, கடைசியாக பயின்ற கல்விக் கூடத்திலிருந்து பெறப்பட்ட சான்று ஒன்று மற்றும் விண்ணப்பதாரரை தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து 1.11.2019-க்கு பின்னா் பெறப்பட்ட சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை (பதிவு செய்திருந்தால் மட்டும்) ஆகிய சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகலுடன், அசல் சான்றையும், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தவறாமல் எடுத்து வரவேண்டும்.

    இவை சரிபாா்க்கப்பட்ட பின்னா், உடல் தகுதித் தோ்வுகளில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai