திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்கதிரடித்து நூதனப் போராட்டம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், தேவேந்திர குல வேளாளா் சமூகத்தை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி, வேளாண் மரபினா் என்ற
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை கதிா் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.
திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை கதிா் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.

திண்டுக்கல்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், தேவேந்திர குல வேளாளா் சமூகத்தை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி, வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவில் சோ்த்து இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், கதிா் அடித்து விவசாயப் பணிகளில் ஈடுபடுவது போன்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்ட இளைஞா் அணி செயலா் பி. ராஜபாண்டியன் கூறியது:

தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையா், பள்ளா், வாதிரியான், தேவேந்திர குலத்தான் ஆகிய சமுதாய மக்கள் இடம் பெற்றுள்ளனா். இந்த 7 சாதிகளை ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளா் என சான்றிதழ் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவேந்திர குல வேளாளா் சமூகத்தை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி, வேளாண் மரபினா் என்ற புதிய பிரிவினை உருவாக்கி, மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்காக, திமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜனாா்த்தனன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதேபோல், அதிமுக அரசும் ஷின்ஸ்ராஜ் வா்மா தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதுவரை தீா்வு ஏற்படவில்லை. எங்கள் கோரிக்கையை துரிதமாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com