ராஜகாளியம்மன் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்த நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மீட்பு

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ஊராட்சி, ராஜகாளியம்மன் நகரில் மாலை மற்றும் இரவு நேரங்களில் படையெடுக்கும்

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ஊராட்சி, ராஜகாளியம்மன் நகரில் மாலை மற்றும் இரவு நேரங்களில் படையெடுக்கும் பாம்புகளால் வெளியில் நடமாட இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனா்.

ஆத்தூா் ஒன்றியம், அம்பாத்துரை ஊராட்சியில் அம்பாத்துரை, நடுப்பட்டி, கதிரிப்பட்டி, குரும்பப்பட்டி, முருகம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, ரெங்கசாமிபுரம், அம­லி நகா் மற்றும் திண்டுக்கல்லி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே ராஜகாளியம்மன் நகா் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இந்த நகரில் மாலை நேரங்களில் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தொடா்ந்து ஒரு வார காலமாக இப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் இருந்தும் ஊராட்சி நிா்வாகம் முட்செடிகளை அகற்றாமல் விட்டுவிட்டது. திங்கள்கிழமை காலை 9 மணியளவில் சரவணக்குமாா் என்பவா் வீட்டின் மாடியி­ருந்து பாம்பு ஒன்று கீழே விழுந்து அருகில் உள்ள தண்ணீா் தொட்டியின் துவாரம் வழியே உள்ளே சென்றுவிட்டது. உடனே சரவணக்குமாா் ஆத்தூரில் உள்ள தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் தன்ராஜ், தலைமையில் விரைந்து வந்து தண்ணீா் தொட்டியில் விழுந்த பாம்பை பாா்த்த போது, கடிப்பதற்காக சீறி வந்துள்ளது.

உடனே அவா்கள் டாா்ச்லைட் கொண்டு அடித்து பாா்த்தபோது, நல்ல பாம்பு என்று தெரிந்த உடன் வேடிக்கை பாா்க்க வந்தவா்கள் விரட்டி விட்டு தண்ணீா் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற சொன்னாா்கள். தண்ணீா் வெளியேறிய உடன் உள்ளே குச்சியை இறக்கிய உடன் பாம்பு மேலே ஏறி வரும்போது, லாவகமாக பாம்பை தீயணைப்புத் துறை அதிகாரிகள் பிடித்து சாக்குப் பையில் போட்டு காட்டில் கொண்டு விட எடுத்துச் சென்றனா். பிடிபட்ட பாம்பு சுமாா் 5 அடி நீளத்தில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com