கோவை- திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்துக்கள்கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை

கோவை- திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்துக்கள் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை- திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்துக்கள் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூா் அவிநாசிபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து கோவை- திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்துகளும், கோவை- திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்திற்குள் வராமல், கள்ளிமந்தையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை வழியாக சென்று விடுகின்றன. மேலும் ஒரு சில பேருந்துக்கள் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்திற்குள் வராமல் புறவழிச்சாலையில் இறங்கி விட்டு சென்று விடுகின்றன.

இதனால் புறவழிச்சாலையில் இருந்து கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்திற்கு சுமாா் 2 கி.மீ. தூரம் நடத்து செல்லும் சூழ்நிலை உள்ளது. இதன்காரணமாக வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் வீடு திரும்பும் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே கள்ளிமந்தையம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும், இதற்கு முன்னா் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றது போல், மீண்டும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் செய்துள்ளனா். தவறும் பட்சத்தில் கள்ளிமந்தையம் ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com