திண்டுக்கல்லில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் கோட்டாட்சியா் கு.உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது. திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நிலக்கோட்டை, ஆத்தூா் மற்றும் நத்தம் வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com