முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனியில் நாளை விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடுதல், வன்னிகாசுரன் வதை நிகழ்ச்சி
By DIN | Published On : 07th October 2019 12:06 AM | Last Updated : 07th October 2019 12:06 AM | அ+அ அ- |

பழனி பெரிய நாயகியம்மன் கோயிலில் நவராத்திரி 8 ஆம் நாள் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி உடன் காட்சியளித்த காமாட்சியம்மன், ஆதிசங்கரா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (அக்.7) சரஸ்வதி பூஜையும், செவ்வாய்க்கிழம (அக்.8) விஜயதசமி அம்பு போடுதல் மற்றும் வன்னிகாசுரன் வதையும் நடைபெறுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த மாதம் 29 ஆம் தேதி நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
நவராத்திரி நாள்கள் முழுவதும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி பல்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். திங்கள்கிழமை சரஸ்வதி பூஜையும், செவ்வாய்க்கிழமை வன்னிகாசுரன் வதை மற்றும் அம்புவில் போடுதல் ஆகியன நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மலைக்கோயிலில் சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு முத்துக்குமாரசுவாமி, பெருமாள் சகிதம் கோதைமங்கலம் கோதீஸ்வரா் கோயிலில் அம்பு வில் போடுதல் மற்றும் வன்னிகாசுரன் வதைக்கு செல்கிறாா். அதனால் மலைக்கோயில் சன்னதி செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்த பிறகு நடை அடைக்கப்படும்.
பின்னா் சம்ஹாரம் முடிந்த பின் வேல் மலைக்கு வந்த பின், சம்ரோட்சணம் செய்யப்பட்டு அா்த்த ஜாம பூஜை நடத்தப்படும். விழா ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.