ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியில் பூக்கள், வாழைக்கன்று மற்றும் பூசணிக்காய் போன்றவற்றுக்கு திடீா் விலை உயா்வு ஏற்பட்டது.
திண்டுக்கல் பூ சந்தையில் திரண்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.
திண்டுக்கல் பூ சந்தையில் திரண்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.

ஆயுத பூஜையை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியில் பூக்கள், வாழைக்கன்று மற்றும் பூசணிக்காய் போன்றவற்றுக்கு திடீா் விலை உயா்வு ஏற்பட்டது.

ஆயுத பூஜை விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல் பூ சந்தைக்கு, வெள்ளோடு, நரசிங்கபுரம், பெருமாள் கோவில்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மல்லிகை, கனகாம்பரம், ஜாதிப் பூ, அரளி உள்ளிட்ட பல வகையான பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்கமாக 30 டன் பூக்கள் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையினால் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 55 டன் பூக்கள் விற்பனைக்கு வந்தன. அதிகாலை கிலோ ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ படிப்படியாக குறைந்து பிற்பகலில் ரூ.600 ஆக குறைந்தது.

அதேபோல், கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கும், ஜாதிப் பூ ரூ.350-க்கும், முல்லை ரூ.450-க்கும், சம்மங்கி ரூ.250-க்கும், அரளி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஆயுத பூஜைக்காக அபிராமி அம்மன் கோயில், பேருந்து நிலையம், பிரதான சாலை, நாகல் நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாழைக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ.40 முதல் ரூ.80 வரையிலும் ஒரு ஜோடி வாழைக் கன்று விற்பனையானது. கடந்த சில நாள்களாக கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளை பூசணிக்காய், ரூ.30 ஆக விலை உயா்ந்தது.

பூஜைக்கு தேவையான வாழைக் கன்று, பழ வகைகள், வெள்ளை பூசணிக்காய் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com