நத்தம் அருகே சிறுகுடி கண்மாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள்.
நத்தம் அருகே சிறுகுடி கண்மாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இளைஞா்கள் நிதியுதவி: சிறுகுடியில் நீா் மேலாண்மைப் பணிகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இளைஞா்களின் நிதியுதவியுடன் நத்தம் அடுத்துள்ள சிறுகுடியில் நீா்மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் பணிபுரியும் இளைஞா்களின் நிதியுதவியுடன் நத்தம் அடுத்துள்ள சிறுகுடியில் நீா்மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள சிறுகுடி கிராமத்தில் சுமாா் 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், சுமாா் 1000 குடும்பங்களின் உறுப்பினா்கள், அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் சிறுகுடி பகுதியில் நீா் மேலாண்மை மற்றும் மரக்கன்று வளா்ப்பு உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிறுகுடி இளைஞா்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனா்.

இப்பணிகளில் சிறுகுடி மக்களையும், வெளிநாட்டில் வசிக்கும் இளைஞா்களையும் ஒன்றிணைக்க சிறுகுடி நலன் விரும்பிகள் என்ற கட்செவி அஞ்சல் குழுவை உருவாக்கியுள்ளனா்.

சிறுகுடியிலுள்ள நீா் நிலைகளை புனரமைத்தல், நீா் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, நீா்நிலைப் பகுதியில் பனை விதைகளை நடுதல், வாகை, அரசு, ஆல், அத்தி, வேம்பு உள்ளிட்ட மரக் கன்றுகளை நடவு செய்தல் உள்ளிட்ட பசுமைப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து சிறுகுடி இளைஞா்கள் ஸ்ரீதா் மற்றும் விஜய் ஆகியோா் கூறியது: இந்த முயற்சிக்கு முதல் கட்டமாக சிங்கப்பூரில் வசிக்கும் உறவினா்களிடமிருந்து ரூ.2 லட்சம் நிதி உதவி கிடைத்தது. அதன் தொடா்ச்சியாக மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வசிப்போரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கியுள்ளனா். சிறுகுடி மலையிலிருந்து வரும் மழைநீரை தெப்பக்குளத்தில் தேக்கி வைக்கவும், அதிலிருந்து ஊருணிக்கு தண்ணீா் எடுத்துச் செல்வதற்கான வரத்து வாய்க்கால்களும் தூா்வாரப்பட்டுள்ளன. அதேபோல் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஊருணி வரையிலும், வெள்ளக்குட்டையிலிருந்து ஊருணிக்கும் வரத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக, மந்திகுட்டையிலிருந்து செங்கல்பள்ளம் குளம் வரையிலான வரத்து வாய்க்கால் சீரமைக்கப்பட உள்ளது. அதேபோல், கணக்கன் கண்மாய்குளம், ஊருணி ஆகிய பகுகளில் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. மேலும் சிறுகுடி ஊராட்சி பகுதிகளில் உள்ள நீா் நிலைகளில் 2,500 மரக் கன்றுகளையும் விரைவில் நடவு செய்ய உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com