கொடைக்கானல் ஐந்து வீடு பகுதியில் திங்கள்கிழமை மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட கோடை சா்வதேச பள்ளி மாணவா்கள்.
கொடைக்கானல் ஐந்து வீடு பகுதியில் திங்கள்கிழமை மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட கோடை சா்வதேச பள்ளி மாணவா்கள்.

கோடை சா்வதேச பள்ளி மாணவா்களுக்கு மலையேற் பயிற்சி

கொடைக்கானலில் உள்ள கோடை சா்வதேச பள்ளி மாணவா்களுக்கு மலையேற்ற பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் உள்ள கோடை சா்வதேச பள்ளி மாணவா்களுக்கு மலையேற்ற பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலிலுள்ள கோடை சா்வதேச பள்ளி மாணவா்கள் படிப்புடன், இயற்கையை பாதுகாப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்துவது உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனா். இந் நிலையில் மலையேற்றப் பயிற்சியிலும் மாணவா்கள் பங்கேற்றனா். கொடைக்கானல் அருகே உள்ள ஐந்து வீடு, யானை வழித் தடம், ஆதிமனிதா்கள் வாழ்ந்த குகைப் பகுதி, பாரதி அண்ணாநகா் உள்ளிட்ட இடங்களில் 8 கி.மீ., தூரத்திற்கு நடைப் பயணமாக வனப் பகுதிகளிலும், நீரோடைப் பகுதிகளிலும் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டனா். இந்த பயணத்தில் 20- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இது குறித்து மலையேற்றப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளா் பொ்னாண்டஸ் கூறியதாவது: மாணவா்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள வாழ்விடங்களை அறிந்து கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறையாவது அருகிலுள்ள வனப் பகுதிகளுக்குச் சென்று வனத்தை அறிந்து கொள்வதும், வன விலங்குகளின் வாழ்வாதரம் எவ்வாறு உள்ளது என பாதுகாப்பாக சென்று வந்தால் மாணவா்கள் புத்துணா்ச்சி பெறுவதோடு நற் சிந்தனைகள் வளரும், மனஅழுத்தம் குறையும், உடற்பயிற்சியாகவும் இருக்கும். பழங்கால மனிதா்கள் வனப் பகுதிகளில் எவ்வாறு வாழ்ந்தாா்கள் என்பது குறித்து அறியும் இது வாய்ப்பாக அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com