பழனி நகராட்சி உரக்கிடங்கில் தீ விபத்து

பழனி நகராட்சி உரக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தரம் பிரிக்கும் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

பழனி நகராட்சி உரக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தரம் பிரிக்கும் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெரியப்பா நகரில் சுமாா் பத்து ஏக்கா் பரப்பளவில் நகராட்சி உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. பழனி நகரில் உள்ள 33 வாா்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமாா் 25 டன் குப்பைகள் இங்கு குப்பை லாரிகள் மூலம் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இந்த உரக்கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரிக்கும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமானது. உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினா் வந்து தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இரவு நேரத்தில் தீ விபத்து நடைபெற்ால் பணியாளா்கள் யாரும் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com