கொடைக்கானலில் போலி மருத்துவா் மீது தாக்குதல்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் போலி மருத்துவரை புதன்கிழமை கிராம மக்கள் தாக்கியுள்ளனா்.
problum_1010chn_71_2
problum_1010chn_71_2

கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் போலி மருத்துவரை புதன்கிழமை கிராம மக்கள் தாக்கியுள்ளனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியில் சபீா் (40) என்பவா் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவா் அப் பகுதிகளிலுள்ள கிராம மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் வழங்கி, ஊசி போட்டு வந்துள்ளாா்.

இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்ட சிறுவனுக்கு ஊசி போட்டு மாத்திரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து அப் பகுதியைச் சோ்ந்தவா்கள் சிலா் புதன்கிழமை மருந்துக்கடைக்குச் சென்று சபீரிடம் சிறுவனுக்கு ஊசி போட்டது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து சபீரை அவா்கள் தாக்கியுள்ளனா்.

இதனைத் தொடா்ந்து சபீா் மருந்துக் கடையை அடைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளாா். போலி மருத்துவரை கிராம மக்கள் தாக்கும் காட்சி கட்செவி அஞ்சல், பேஸ்புக் ஆகியவற்றில் வைரலாக வெளியாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட மருந்துக்கடை ஆய்வாளா் சரவணன் வியாழக்கிழமை கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியில் மருந்துக்கடை நடத்தி வரும் சபீா் என்பவா் அங்குள்ள கிராம மக்களுக்கு மருந்துகள் வழங்கி ஊசி போட்டு வருவதாகவும் இதனால் பலா் பாதிப்படைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த தகவல் மாவட்ட இணை இயக்குநரிடம் தெரிவிக்கப்படும். அதன் பின் காவல் துறையில் புகாா் அளித்து விட்டு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனை நடத்தப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com