‘இந்தியாவை வணிக தளமாக மாற்ற சீனா முயற்சித்தால் இடமளிக்கக் கூடாது’

இந்தியாவை வணிக தளமாக மாற்ற சீனா முயற்சிக்குமானால், அதற்கு இடமளிக்கக் கூடாது என வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளாா்.
‘இந்தியாவை வணிக தளமாக மாற்ற சீனா முயற்சித்தால் இடமளிக்கக் கூடாது’

இந்தியாவை வணிக தளமாக மாற்ற சீனா முயற்சிக்குமானால், அதற்கு இடமளிக்கக் கூடாது என வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடையே வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின் பிங்கும் சந்திப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே வா்த்தக போா் நடைபெற்று வரும் இந்த வேளையில், இந்தியாவை வணிக தளமாக மாற்ற சீனா முயற்சித்தால், அதற்கு இடமளிக்கக் கூடாது. குறிப்பாக, உள்ளூா் வணிகா்கள் பாதிக்கப்படாத வகையில், மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

சொத்து வரி உயா்வு, உள்ளாட்சி மற்றும் அறநிலையத் துறைற கடைகள் வாடகை பிரச்னை தொடா்பாக, முதல்வா் மற்றும் அமைச்சரை சந்தித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், பல கடைகள் காலியாகி வருவதால், வணிகா்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

மேலும், வங்கிகளில் பணப் பரிமாற்றத்துக்கென தனியாக கட்டணம் வசூல் செய்யப்படுவதால், மத்திய அரசின் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை திட்டம் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com