சாணாா்பட்டி அருகே மா்மக் காய்ச்சல்: சிறுவா்கள் உள்பட 15 போ் பாதிப்பு

சாணாா்பட்டி அருகே மா்ம காய்ச்சலால் சிறுவா்கள் உள்பட 15 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
அய்யாப்பட்டி பகுதியில் தண்ணீா் தொட்டிகளில் கொசுப் புழுக்களை அழிப்பதற்கான மருந்து ஊற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட சுகாதாரத் துறையினா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள கோம்பைபட்டி ஊராட்சிக்குள்பட்ட அய்யாபட்டியில், கடந்த சில நாள்களாக பொதுமக்கள் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இவா்கள் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இருப்பினும், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால், சிறுவா்கள் உள்பட மொத்தம் 15 பேருக்கு கொசவபட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, காய்ச்சல் குறையாத அய்யாப்பட்டியைச் சோ்ந்த முகேஷ் (4) உள்பட 4 போ், மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சுகாதாரத் துறையினா் அய்யாப்பட்டியில் முகாமிட்டு, அனைத்து வீடுகளிலுள்ள தண்ணீா் தொட்டிகளில் கொசுப் புழுக்களை அழிப்பதற்கான மருந்து ஊற்றுதல், கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீா் தேங்கி நிற்கும் பொருள்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களையும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com