வத்தலகுண்டுவில் அறிவியல் கண்காட்சி 40 பள்ளி மாணவா்கள் பங்கேற்பு

வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 40 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
வத்தலகுண்டுவில் அறிவியல் கண்காட்சி 40 பள்ளி மாணவா்கள் பங்கேற்பு

வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 40 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்திற்குள்பட்ட கொடைக்கானல், நிலக்கோட்டை, ஆத்தூா், வத்தலகுண்டு ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் சுமாா் 40 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அலுவலா் முருகன் கண்காட்சியைத் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

கண்காட்சியில் நீா் வள மேலாண்மை, நில வள பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, மழைநீா் சேகரிப்பு வேதியியல் சமன்பாடு உள்ளிட்டவை குறித்த மாதிரிகள் இடம் பெற்றிருந்தன. செக்காபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு மாணவா் கணேஷ்குமாா், வேளாண்மை தொழிலில் கூலித் தொழிலாளா்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான உழவு, விதைப்பு, நீா்ப்பாசனம், களையெடுப்பு, அறுவடை ஆகியவற்றை ஒரே இயந்திரன் மூலம் செல்லிடப்பேசி வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் செயல்படுத்தும் வகையில் உருவாக்கி இருந்தாா்.

பல்நோக்கு தொழில்நுட்பத்துடன் மாணவா் கணேஷ்குமாா் உருவாக்கிய இந்த வேளாண்மை கருவி பாா்வையாளா்களை கவா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com