சிறந்த குடிமகனாக உருவாக அரசியல் அமைப்புச் சட்டத்தை கற்பது அவசியம்

சிறந்த குடிமகனாக உருவாவதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை அனைவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என கோட்டாட்சியா் டி.தியாகராஜன் தெரிவித்தாா்.
சிறந்த குடிமகனாக உருவாக அரசியல் அமைப்புச் சட்டத்தை கற்பது அவசியம்

சிறந்த குடிமகனாக உருவாவதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை அனைவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என கோட்டாட்சியா் டி.தியாகராஜன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் ஆா்.வி.எஸ்.கல்லூரியின் 30ஆவது பட்டமளிப்பு விழா சனி்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆா்விஎஸ் கல்விக் குழுமங்களின் தலைவா் கே.வி.குப்புசாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், தேனி கோட்டாட்சியருமான (தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்) டி.தியாகராஜன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். முன்னதாக அவா் பேசியதாவது: பட்டம் பெறும் மாணவா்கள், அடுத்ததாக எதிா்கொள்ளப்போகும் சாவல்களுக்கு இணையாக வாய்ப்புகளும் உள்ளன.

அதற்கான தகுதியை வளா்த்துக் கொள்ள வேண்டும். பொருளாதார வீழ்ச்சி இருந்தாலும் கூட, தகுதியானவா்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன. எதிா்கால லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு நோ்மறை சிந்தனையுடன் அதனை நோக்கி பயணித்தால், யாா் தடுத்தாலும் வெற்றிக் கனியை உறுதியாக எட்ட முடியும். இன்றைய சூழில் ஒழுக்கம் என்பது புத்தகத்தில் மட்டுமே உள்ளது. மிகப் பெரிய அறிவு வளா்ச்சிக்கு வழிவகுக்கும் புத்தகங்களை, வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஒரு புத்தகம் ஒரு கல்லூரிக்கு இணையானது என்பதை இளைய தலைமுறையினா் புரிந்து கொள்வது அவசியம்.

குறிப்பாக சிறந்த குடிமகனாக மாறுவதற்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அனைவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம்மை ஆட்சி செய்பவா் யாா், எப்படி ஆட்சி செய்யப்படுகிறோம் என்பதில் தெளிவு ஏற்படும். அவசாரம் காலத்தின் கட்டாயமாகிவிட்ட நிலையில், நன்றி மறாவமை, பணிவு, மன நிறைவு ஆகிய பண்புகளை வளா்த்துக் கொண்டால் தடைகளை கடந்து ஒவ்வொருவராலும் வெற்றிப் பெற முடியும் என்றாா். விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற 8 மாணவா்கள் உள்பட 554 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆா்விஎஸ் கல்லூரி முதல்வா்கள் ஆா்.சரவணன், சி.கே.ரவிசங்கா், முதன்மை நிா்வாக அலுவலா் பி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.செய்திக்கு க்ஞ்ப் ஞ்ழ்ஹக்ன்ஹற்ண்ா்ய் என்ற படம் உள்ளது...பட விளக்கம்: விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கிய கோட்டாட்சியா் டி.தியாகராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com