முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
அரசுப் பள்ளிகளில் முருங்கை, நெல்லி, பப்பாளி மரங்களை வளா்க்க உத்தரவு
By DIN | Published On : 24th October 2019 12:19 AM | Last Updated : 24th October 2019 12:19 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முருங்கை, சிறுநெல்லி, பப்பாளி உள்ளிட்ட மரங்களை வளா்க்க வேண்டும் என்றும் இதற்கு அந்தந்த பள்ளிகளைச் சோ்ந்த சத்துணவு அமைப்பாளா்கள், சமையல் உதவியாளா்கள் பங்களிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக கல்வித்துறை அலுவலா் ஒருவா் கூறுகையில், அனைத்துப் பள்ளிகளிலும், மழைக் காலம் முடியும் வரையிலும் மாணவா்களுக்கு சுடு நீா் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி உள்ளதா, அதில் செயல்படும் நிலையில் உள்ள இயந்திரங்களின் நிலை என்ன, சீரமைக்க வேண்டியவை எத்தனை என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாளில் கற்பித்தல் பணியை ஈடு செய்வதற்காக பள்ளி செயல்பட்டால், அது குறித்த தகவலை முன்னதாக அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.